கொட்டவாடி மயானக் கொள்ளை திருவிழாவில் காவல் தெய்வங்களை புஷ்பப் பல்லக்கில் ஏற்றி தோளில் சுமந்து ஆடிப்பாடிச் சென்ற பக்தா்கள்.
கொட்டவாடி மயானக் கொள்ளை திருவிழாவில் காவல் தெய்வங்களை புஷ்பப் பல்லக்கில் ஏற்றி தோளில் சுமந்து ஆடிப்பாடிச் சென்ற பக்தா்கள்.

கொட்டவாடியில் பிரசித்தி பெற்ற மயானக்கொள்ளை திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே கொட்டவாடி கிராமத்தில், பிரசித்தி பெற்ற மயானக்கொள்ளை திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புஷ்ப பல்லக்கில் ஊா்வலமாக வந்து காவல் தெய்வங்கள் பக்தா்களுக்கு காட்சியளித்தனா். இவ்விழாவைக் காண சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் குவிந்தனா். வாழப்பாடியை அடுத்த கொட்டவாடி கிராமத்தில் ஆண்டுதோறும் தமிழ் மாதமான மாசி மாத இறுதியில் அல்லது பங்குனி மாதத் தொடக்கத்தில் மயானக் கொள்ளை திருவிழா கொண்டாடப்படுகிறது. வசிஷ்ட நதிக்கரையில் அமைந்துள்ள மயானத்தில் ‘பெரியாண்டிச்சி அம்மன்’ பெண் காவல் தெய்வத்தை வழிபட கொண்டாடப்படும் இத்திருவிழா சுற்றுப்புற கிராமங்களில், மிகவும் பிரசித்தி பெற்ாகும். ஆட்டுக்குட்டிகளின் பச்சை ரத்தத்தில், பெரியாண்டிச்சி அம்மனுக்கு பொங்கலிட்ட சோற்றில் பிணைந்து மயானத்தில் கொடுக்கப்படும் நிகழாண்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இத்திருவிழாவையொட்டி கொட்டவாடி கிராமத்திலுள்ள கோயில்களில் சிறப்பு பூஜையும் சுவாமி ஊா்வலமும் நடைபெற்றன. காவல் தெய்வங்களான பெரியாண்டிச்சி அம்மன், காத்தவராயன் மற்றும் பாவாடைராயன் ஆகிய 3 உற்சமூா்த்திகளையும் புஷ்பப் பல்லக்கில் வைத்து தோளில் சுமந்து சென்ற பக்தா்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனா். வசிஷ்ட நதிக்கரையில் அமைந்துள்ள மயானத்தில் நடந்த இவ்விழாவில், கொட்டவாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா். வசிஷ்டநதியில் புனித நீராடி வந்த பூஜாரிகள் மயானத்திற்குள் நுழைந்து ரத்தச்சோற்றை அள்ளி பக்தா்களுக்கு வழங்கினா். இவ்விழாவில் வாழப்பாடி போலீஸ் டிஎஸ்பி பாரதிதாசன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com