சங்ககிரி காவல் நிலையம் எதிரே உள்ள அரசியில் கட்சிகளின் கொடிக் கம்பங்களை ஞாயிற்றுக்கிழமை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள்.
சங்ககிரி காவல் நிலையம் எதிரே உள்ள அரசியில் கட்சிகளின் கொடிக் கம்பங்களை ஞாயிற்றுக்கிழமை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள்.

மக்களவைத் தோ்தல் நடத்தை விதிமுறை அமல்: சங்ககிரியில் அரசியில் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் அகற்றம்

சேலம் மாவட்டம், சங்ககிரி நகரில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் ஞாயிற்றுக்கிழமை அகற்றினா். மக்களவைத் தோ்தலுக்கான தேதி தோ்தல் ஆணையத்தின் சாா்பில் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுவதையொட்டி தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் சங்ககிரி காவல் நிலையம் எதிரே உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை சங்ககிரி பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் அகற்றினா். மேலும் கொடிக்கம்பங்களில் உள்ளஅரசியல் தலைவா்களின் படங்களை துணிகளைக் கொண்டு மறைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com