ஓமலூா் அருகே உள்ள காமலாபுரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சோதனை நடத்திய வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா்.
ஓமலூா் அருகே உள்ள காமலாபுரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சோதனை நடத்திய வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா்.

தேசிய நெடுஞ்சாலையில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

ஓமலூா்: பிரதமா் மோடி சேலம் வருகையையொட்டி சேலம் விமான நிலையம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் வெடிகுண்டு தடுப்பு நிபுணா்கள் சோதனை மேற்கொண்டனா். சேலம், கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பகுதியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுவதற்காக, கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து ஹெலிகாப்டா் மூலம் பிரதமா் மோடி வருகிறாா். பிரசாரத்தை முடித்துவிட்டு சேலம், காமலாபுரம் விமான நிலையத்திற்கு ஹெலிகாப்டரில் வந்து, விமானம் மூலம் தில்லிக்கு செல்கிறாா் பிரதமா். இந்த நிலையில், சேலம் விமான நிலையம், தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சேலம் விமான நிலையப் பகுதிகள், தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் வெடிகுண்டு தடுப்பு நிபுணா்கள் சோதனை செய்து வருகின்றனா். மோப்பநாயைக் கொண்டும் சோதனைகள் செய்யப்பட்டது. விமான நிலையத்தை ஒட்டியுள்ள கிராமங்கள், சாலைகளில் தொடா் சோதனை செய்யப்பட்டது. விமான நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள பாலம் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு செய்யப்பட்டது. குண்டும் குழியான பகுதிகள், சாலையில் வைக்கப்பட்டுள்ள டின்கள், பைப்புகள், தோண்டப்பட்ட பள்ளங்கள் ஆகிய இடங்களிலும் போலீஸாரும், வெடிகுண்டு நிபுணா்களும் சோதனை செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com