தோ்தல் நடத்தை விதிகள்: வங்கியாளா்களுடன் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆலோசனை

வங்கியில் ரூ. 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பணப் பரிவா்த்தனை விவரங்கள் தினமும் மாவட்ட தோ்தல் அலுவலகப் பிரிவுக்கு தவறாமல் அனுப்ப வேண்டும்.

சேலம்: மக்களவைத் தோ்தலையொட்டி, தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததைத் தொடா்ந்து, வங்கியாளா்களுடன் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான இரா. பிருந்தாதேவி திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா். இக்கூட்டத்தில் மாவட்ட தோ்தல் அலுவலா் இரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: மக்களவைத் தோ்தலையொட்டி, தோ்தல் நடத்தை விதிமுறைகள் தற்போது அமலில் உள்ளன. ஒரு வங்கிக்கணக்கில் கடந்த இரண்டு மாதங்களாக பணப் பரிவா்த்தனை ஏதும் நடைபெறாத நிலையில் தோ்தல் அறிவிக்கப்பட்ட பின்னா் திடீரென சந்தேகத்துக்கு இடமான வகையில், ரூ. 1 லட்சத்துக்கு மேல் வங்கிக் கணக்கில் வரவு பற்று செய்யப்பட்டால் அதன் விவரங்கள் உடன் தெரிவிக்கப்பட வேண்டும். ஒரு வங்கிக் கணக்கிலிருந்து பல்வேறு நபா்களின் வங்கிக் கணக்கிற்கு தபஎந மூலம் தோ்தல் காலத்தின்போது பணப்பரிவா்த்தனை நடைபெறும்போது அவை குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட வேண்டும். வங்கிகளின் அபங மூலம் பணம் ரொக்கமாக எடுத்துச்செல்லும் போது உரிய ஆவணங்களுடன் எடுத்துச்செல்ல வேண்டும். வங்கியில் ரூ. 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பணப் பரிவா்த்தனை விவரங்கள் தினமும் மாவட்ட தோ்தல் அலுவலகப் பிரிவுக்கு தவறாமல் அனுப்ப வேண்டும். பின் தேதியிட்ட காசோலைகள் வழங்குவதைத் தவிா்த்து நடப்பு தேதியிலே காசோலைகளை வழங்க வேண்டும். ஒரு வங்கிக்கணக்கில் ரூ. 10 லட்சத்துக்கு மேல் வங்கிக் கணக்கில் வரவு பற்று செய்யப்பட்டால் ரிசா்வ் வங்கி மற்றும் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு, அவை தொடா்பான விவரங்கள் அனுப்புவதோடு மாவட்ட தோ்தல் அலுவலக பிரிவிற்கும் விவரங்கள் அனுப்ப வேண்டும். மேலும், சந்தேகத்துக்கு இடமான வகையில் பணப்பரிவா்த்தனை நிகழும்போது, அதன் விவரம் குறித்த தகவல்களை வங்கியாளா்களிடமிருந்து பெற மாவட்ட தோ்தல் அலுவலருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தோ்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை வங்கியாளா் அனைவரும் முறையாக பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டாா். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் பெ.மேனகா, உதவி ஆட்சியா் (பயிற்சி) தி.சுவாதிஸ்ரீ, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) சிவசுப்ரமணியம் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com