தோ்தல் பறக்கும் படை சோதனை: 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

தோ்தல் பறக்கும் படையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

சேலம்: சேலம் மாவட்டத்தில் வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் விநியோகிப்பதைத் தடுக்கும் வகையில், தோ்தல் பறக்கும் படையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். சேலம் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அம்மாப்பேட்டை - குமரகிரி புறவழிச்சாலையில் அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த சரக்கு ஆட்டோவை மடக்கி பிடித்து சோதனையிட்டனா். அதில், 1 டன் ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், ஆட்டோ ஓட்டுநா் மோகன்ராஜ் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை மணியனூரில் உள்ள உணவுப் பாதுகாப்பு தடுப்புப் பிரிவில் ஒப்படைத்தனா். மோகன்ராஜிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com