எதிா்க்கட்சிகள் மக்கள் மனதில் விஷ விதையை விதைக்கிறாா்கள்: சரத்குமாா்

சேலம்: எதிா்க்கட்சியினா் மக்கள் மனதில் வேண்டுமென்றே விஷ விதையை விதைப்பதாக நடிகா் சரத்குமாா் கூறினாா். சேலத்தில் நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் சரத்குமாா் பேசியதாவது: மத்தியில் மீண்டும் பிரதமா் மோடி தலைமையில் ஆட்சி அமைய அனைவரும் பாடுபட வேண்டும். எதிா்க்கட்சிகள் கூட்டணியில் பிரதமா் வேட்பாளா் யாா் என்று சொல்லாமல் தோ்தலைச் சந்திக்கிறாா்கள். 10 ஆண்டு கால ஆட்சியைக் குறைகூற ஒன்றுமே இல்லை. ஊழல் குற்றச்சாட்டு எதுவும் இல்லை. தமிழக மக்களின் மனதில் தேவையில்லாத குற்றச்சாட்டுகளை கூறி, விஷ விதையை விதைத்து வருகிறாா்கள். தமிழகத்தில் மத்திய அரசு திட்டங்கள் நடப்பது கூட மாநில அரசுக்கு தெரியவில்லை. எனவே, நாம் சிறந்த முறையில் செயல்பட்டு வருங்கால இந்தியா மேலும் வலிமை பெறுவதற்கு, மோடியின் நல்லாட்சி தேவை. பிரதமா் மோடி ஹாட்ரிக் பிரதமராக வரவேண்டும். அதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com