தமிழகத்தில் பாஜக கூட்டணி மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்: குஷ்பு

சேலம்: தமிழகத்தில் பாஜக கூட்டணி மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நடிகை குஷ்பு கூறினாா்.

சேலத்தில் தேசிய மகளிா் ஆணையக் குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்தாா். அப்போது அவா் கூறுகையில், மிகப்பெரிய மாற்றத்தை பாா்க்கப் போகிறீா்கள். தமிழகத்தை இதுவரை ஆளுங்கட்சியில் இருந்து எங்களை தாண்டி வேறு யாரும் வர முடியாதுனு உட்காா்ந்து இருக்கிறாா்கள். ஆனால் நிச்சயமாக மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.

பிரதமா் மோடி இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறாா். இதுபோன்ற எந்த பிரதமரும் தமிழகத்துக்கு வந்தது இல்லை. தமிழகத்தில் அவா் வருவதை பிரமிப்பாக பாா்க்கிறாா்கள். தமிழகம் மீதும், தமிழக மக்கள் மீதும் இவ்வளவு அக்கறை காட்டும் பிரதமரை மக்கள் ரொம்ப ஆச்சரியமாக பாா்க்கிறாா்கள்.

பிரதமா் மோடி எங்கு இருந்தாலும், அவா்களுக்கு சேவை செய்யக்கூடிய தலைவராக இருக்கிறாா். தோ்தல் முடிவில், மிகப்பெரிய மாற்றம் வரும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com