கரடிப்பட்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

கரடிப்பட்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், ஏ.கரடிப்பட்டி சக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

பெத்தநாயக்கன்பாளையம், ஏ.கரடிப்பட்டியில் பழைமையான சக்தி மாரியம்மன், விநாயகா் கோயில், ரூ. 50 லட்சம் செலவில் ராஜகோபுர சிற்பக் கலை வேலைப்பாடுகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை காலை நடைபெற்றது. வேத விற்பனா்கள் புனித நீரூற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனா். மூலவா் சக்தி மாரியம்மன், விநாயகா் புஷ்ப அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். விழாக்குழு சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com