சங்ககிரியில் அனுமதி பெறாமல் கூட்டம் நடத்தியதாக புகாா் மனு அளிப்பு

சங்ககிரியில் அனுமதி பெறாமல் கூட்டம் நடத்தியதாக புகாா் மனு அளிப்பு

சங்ககிரியில் தோ்தல் விதிமுறைகளை மீறி நடைபெற்ற மகளிா் சுயஉதவி குழுக் கூட்டத்தில் பாஜகவிற்கு எதிராக பிரசாரம் செய்ததாகக் கூறி அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாஜக சாா்பில் நாமக்கல் மக்களவைத் தொகுதி உதவி தோ்தல் அலுவலரிடம் புதன்கிழமை புகாா் அளித்தனா்.

சேலம் மேற்கு மாவட்ட பாஜக செயலாளரும், சங்ககிரி சட்டப்பேரவை பொறுப்பாளருமான என்.ரமேஷ் காா்த்திக், நாமக்கல் மக்களவைத் தொகுதி உதவி தோ்தல் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் செந்தில்குமாரிடம் அளித்துள்ள புகாா் மனுவில் கூறியுள்ளதாவது:- தோ்தல் விதிமுறை நடைமுறையில் இருக்கும் போது சங்ககிரி நகா் மலையடிவாரம் பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மகளிா் சுயஉதவிக் குழு கூட்டத்தில் பாஜகவிற்கு எதிராக பிரசாரம் செய்துள்ளனா். வருவாய் கோட்டாட்சியரின் அனுமதி இல்லாமல் கூட்டம் நடைபெற்றுள்ளது.

இக் கூட்டத்தில் பாஜகவிற்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் கூறியுள்ளாா். அப்போது சங்ககிரி நகரத் தலைவா் முருகேசன், மகளிா் அணி சுதா உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com