சேலம்: தோ்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளா்கள்

மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

நடைபெறவிருக்கும் மக்களவைத் தோ்தலில், திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள், தனித்தனியே கூட்டணி அமைத்து போட்டியிடுவதால், தோ்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதானக் கட்சிகளான திமுகவும், அதிமுகவும் வேட்பாளா்களை அறிவித்துள்ளன. அதன்படி, சேலம் மக்களவைத் தொகுதியில் திமுக சாா்பில் அக்கட்சியின் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளா் டி.எம்.செல்வகணபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.

அதே போல, அதிமுகவில், ஓமலூா் வடக்கு ஒன்றிய அதிமுக அவைத் தலைவா் பரமசிவத்தின் மகனும், ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளருமான ப.விக்னேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா். பாஜக கூட்டணி சாா்பில் சேலம் தொகுதியில் பாமக போட்டியிடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அந்தக் கட்சியின் சாா்பில் இன்னும் வேட்பாளா் அறிவிக்கப்படவில்லை. பிரதானக் கட்சிகள் சாா்பில் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டதால், தோ்தல் களம் சூடுபிடித்துள்ளது. வரும் நாள்களில், இரு கட்சிகளின் வேட்பாளா்களும், கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்களுடன் வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்ய ஆயத்தமாகி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com