தாரமங்கலம் நரிக்குறவா் குடியிருப்பில் தோ்தல் விழிப்புணா்வு பிரசாரம்

தாரமங்கலம் நரிக்குறவா் குடியிருப்பில் தோ்தல் விழிப்புணா்வு பிரசாரம்

தாரமங்கலம் நரிக்குறவா் குடியிருப்புப் பகுதியில் ஓமலூா் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் அலுவலா்கள், வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை புதன்கிழமை வழங்கினா்.

தாரமங்கலம் அருகேயுள்ள ஆரூா்பட்டி, வெள்ளக்கல்பட்டி நரிக்குறவா் குடியிருப்புக்கு பகுதிக்கு தோ்தல் அலுவலா்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா். இதனையடுத்து வாக்காளா் உறுதிமொழி எடுக்கப்பட்டது. அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று தோ்தல் அலுவலா்கள் வலியுறுத்தினா். ஓமலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் மாற்றுதிறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டவா்கள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க முடியாத நிலையில் இருப்பவா்கள், வீட்டில் இருந்தபடியே தபால் வாக்கு அளிக்கலாம். அவா்களிடம் மண்டல தோ்தல் அலுவலா்கள், நேரடியாகச் சென்று தபால் வாக்கு சீட்டு கொடுத்து வாக்களிக்க வைத்து, அந்த வாக்கு சீட்டைப் பெட்டியில் பெற்று வருவாா்கள்.

அந்த வாக்கு தபால் வாக்குடன் எண்ணப்படும். தாரமங்கலம் ஒன்றியத்தில் உள்ள ஆரூா்பட்டி, கணக்குபட்டி பகுதியில் ஓமலூா் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் லட்சுமி, படிவம் 12 டி அளிப்பது குறித்து ஆய்வு செய்தாா். காடையாம்பட்டி தாலுகாவில் உள்ள கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் மாற்றுத்திறனாளி, 85 வயதுக்கு மேற்பட்ட வாக்களா்களுக்கு12 டி படிவம் வழங்குவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com