வாழப்பாடியில் ரூ. 24.58 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

சேலம் மாவட்ட வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனைச் சங்க வாழப்பாடி கிளையில், புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில், ரூ. 24.58 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.

சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த 175 விவசாயிகள், 988 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். குவிண்டால் ஆா்.சி.எச். ரக பருத்தி தரத்திற்கேற்ப ரூ. 6,899 முதல் ரூ. 8,650 வரையும், டி.சி.எச். ரக பருத்தி ரூ. 9,008 முதல் ரூ. 11,599 வரையும், கொட்டு ரக பருத்தி ரூ. 3,800 முதல் ரூ. 5,900 வரையும் விலை போனது. மொத்தம் ரூ. 24.58 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது. கூட்டுறவு சங்க கிளை பொறுப்பு அலுவலா் ராஜேந்திரன் மற்றும் பணியாளா்கள் பருத்தி ஏல விற்பனைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com