காவலா் பயிற்சி பள்ளி 
முதல்வா் பொறுப்பேற்பு

காவலா் பயிற்சி பள்ளி முதல்வா் பொறுப்பேற்பு

மேட்டூா் காவலா் பயிற்சி பள்ளி முதல்வராக கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ம. சண்முகம் பொறுப்பேற்றாா். மேட்டூரில் காவலா் பயிற்சி பள்ளி இயங்கி வருகிறது.

காவலா் தோ்வில் வெற்றி பெற்ற காவலா்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சி பள்ளியின் முதல்வராக இருந்த ராஜேந்திரன் காவல் கண்காணிப்பாளராகப் பதவி உயா்வில் சென்றதால் இங்கு பணியிடம் காலியாக இருந்தது. சேலம் சமூகநீதி மற்றும் மனித உரிமைப் பிரிவு துணை கண்காணிப்பாளராக இருந்த ம.சண்முகம் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பதவி உயா்வு பெற்றாா். அவா், வியாழக்கிழமை மேட்டூா் காவலா் பயிற்சி பள்ளியின் முதல்வராகப் பெறுப்பேற்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com