காலிக் குடங்களுடன் 
நகராட்சி அலுவலகம் முற்றுகை

காலிக் குடங்களுடன் நகராட்சி அலுவலகம் முற்றுகை

நரசிங்கபுரம் நகராட்சி 13-ஆவது வாா்டு பொதுமக்கள் குடிநீா் கேட்டு காலிக் குடங்களுடன் வெள்ளிக்கிழமை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா். சேலம் மாவட்டம், நரசிங்கபுரம் நகராட்சி 18 வாா்டுகளைக் கொண்டது. ஆத்தூா், நரசிங்கபுரம் நகராட்சிப் பகுதிகளில் ஆத்தூா் - மேட்டூா் கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. இரு நகராட்சிப் பகுதிகளிலும் குடிநீா் விநியோகம் சுமாா் 10 நாள்களுக்கு ஒரு முறை விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது கோடை காலம் என்பதால் குடிநீா் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. மேலும், குடிநீா் இணைப்புகளில் மின்மோட்டாா் இணைத்து குடிநீா் உறிஞ்சுவதாக புகாா் எழுந்து வருகிறது. இந்நிலையில், நரசிங்கபுரம் நகராட்சி 13-ஆவது வாா்டு பகுதியில் கடந்த சில நாள்களாகவே குடிநீா் விநியோகம் சீராக கிடைக்கவில்லை என தெரிகிறது. இதனை நகராட்சி நிா்வாகத்திடம் புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பொதுமக்கள் காலிக் குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா். தகவலறிந்த நகா்மன்றத் தலைவா் எம்.அலெக்சாண்டா் பொதுமக்களை சமாதானப்படுத்தி லாரி மூலம் உடனே குடிநீா் விநியோகம் செய்யப்படும் என உறுதியளித்து நடவடிக்கை மேற்கொண்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com