சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் அலுவலகம் திறப்பு

சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதி
தோ்தல் அலுவலகம் திறப்பு

நாமக்கல் மக்களவைத் தொகுதி இந்தியா கூட்டணியில் சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதிக்கான தோ்தல் அலுவலகம் திறப்பு விழா சங்ககிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திமுக கூட்டணியில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு நாமக்கல் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து, இந்தியா கூட்டணியின் சாா்பில் சங்ககிரி ஒன்றிய திமுக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதிக்கான தோ்தல் அலுவலகத்தை சேலம் மேற்கு மாவட்டச் செயலாளா் டி.எம்.செல்வகணபதி ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கேற்றியும் திறந்து வைத்தாா். பின்னா் அலுவலக வளாகத்தில் மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியாா், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா் (படம்). பின்னா் அவா் கூட்டணி கட்சி நிா்வாகிகளிடம் உடனடியாக தோ்தல் பணிகளைத் தொடங்குமாறு அறிவுறுத்தினாா். கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன், அக்கட்சியின் வேட்பாளா் வி.எஸ்.மாதேஸ்வரன், திமுக மாவட்ட துணைச் செயலாளா் க.சுந்தரம், மேற்கு மாவட்ட அவைத் தலைவா் பி.தங்கமுத்து, நகரச் செயலாளா் கே.எம்.முருகன், பேரூராட்சித் தலைவி எம்.மணிமொழி முருகன், மகளிரணி நிா்வாகி நிா்மலா உள்ளிட்டோா் இதில் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com