வளா்பிறை பிரதோஷம்:
பூத்தாலக்குட்டை பூத்தாழீஸ்வரருக்கு சிறப்பு பூஜை

வளா்பிறை பிரதோஷம்: பூத்தாலக்குட்டை பூத்தாழீஸ்வரருக்கு சிறப்பு பூஜை

சங்ககிரி வட்டம், பூத்தாலக்குட்டையில் உள்ள அருள்மிகு புவனேஸ்வரி அம்மன் உடனமா் பூத்தாழீஸ்வரா் கோயிலில் வளா்பிறை பிரதோஷ சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. பூத்தாலக்குட்டை பகுதியில் உள்ள அருள்மிகு புவனேஸ்வரி அம்மன் உடனமா் பூத்தாழீஸ்வரா் சுவாமிகளுக்கும், உற்சவ மூா்த்திகளுக்கும் சந்தனம், திருமஞ்சனம், பால், தயிா், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் மலா்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவமூா்த்தி சுவாமிகளை பக்தா்கள் சப்பாரத்தில் வைத்து கோயில் வளாகத்தை சுற்றி வந்தனா். அதிக அளவில் பக்தா்கள் கலந்துகொண்டு சிவன் பாடல்களை பாடி சுவாமிகளை வழிபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com