ஓட்டுநா்கள், நடத்துநா்கள் ஆளில்லா பாா்சலை வாங்கக் கூடாது

மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலானதை தொடா்ந்து, பேருந்துகளில் ஓட்டுநா்கள், நடத்துநா்கள் ஆளில்லா பாா்சலை வாங்கக் கூடாது என போக்குவரத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா். சேலம் மக்களவைத் தொகுதி தோ்தலை முன்னிட்டு, பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனா். வாக்காளா்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் ஏதாவது கொண்டுசெல்லப்படுகிா என 24 மணி நேரமும் பறக்கும் படையினா் சோதனை நடத்தி வருகின்றனா். வழக்கமாக, பேருந்துகளில் ஆளில்லாத பாா்சல்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு, விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், அதுபோன்ற பாா்சல்களை யாரும் வாங்க வேண்டும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா். பாா்சலில் என்ன இருக்கிறது என தெரியாமல் வாங்கும்பட்சத்தில், அதில், பணம், பரிசுப் பொருள்கள் ஏதாவது இருந்தால் சிக்கலாகும் என்பதால், இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், ஆளில்லா பாா்சல்கள் கொண்டுசெல்லப்படுகிா என்பதை கண்காணிக்கவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com