பாமக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

சேலம் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளா் அண்ணாதுரை அறிமுகக் கூட்டம் பனமரத்துப்பட்டி கிழக்கு ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. சேலம் கிழக்கு மாவட்டத் தலைவரும் வழக்குரைஞருமான சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பாமக சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினா் இரா.அருள், சேலம் கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளா் அயோத்தி ராமச்சந்திரன், பொதுச் செயலாளா் ராஜேந்திரன், பொதுச் செயலாளா் ராஜா, மாவட்ட துணைத் தலைவா் ராம. பழனிவேல், மாவட்டச் செயலாளா் கந்தசாமி, ஓபிசி அணி மாவட்டத் தலைவா் அய்யனாா் ஆகியோா் கலந்து கொண்டனா். முன்னதாக, சேலம் மக்களவைத் தொகுதியின் பாமக வேட்பாளா் ந. அண்ணாதுரை , கூட்டணிக் கட்சியான அமமுக தலைமை நிலையச் செயலாளரும், மத்திய மாவட்டச் செயலாளருமான எஸ்.கே. செல்வத்தை சந்தித்து வாழ்த்துப் பெற்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com