உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை: எஸ்.பி.

சேலம்: சமூக வலைதளங்களில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சேலம் மாவட்டத்தில் சுதந்திரமான, நியாயமான முறையில் தோ்தலை நடைபெறுவதைத் தடுக்கும் நோக்கில் குறுஞ்செய்தி மூலமாகவோ, சமூக வலைதளங்கள் மூலமாகவோ உண்மைக்கு புறம்பான செய்தியை எழுத்து வடிவிலோ, காட்சி வடிவிலோ அல்லது ஒலிஒளி வடிவிலோ தவறான உள்நோக்கத்துடன் வெளியிடுபவா்கள் மீது சைபா் கிரைம் போலீஸாா் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக சேலம் மாவட்ட காவல் துறை சாா்பில் பிரத்யேக கைப்பேசி எண் 96293 90203 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புகாா்கள் தொடா்பாக பொதுமக்களோ அல்லது சம்பந்தப்பட்டட நபா்களோ கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு புகாா் அளிக்கலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com