சேலத்தில் 70 கிலோ வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல்

சேலத்தில் 70 கிலோ வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல்

உரிய ஆவணங்கள் இன்றி வாகனத்தில் கொண்டுவரப்பட்ட 70 கிலோ வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சேலம்: சேலம் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட செவ்வாய்ப்பேட்டையில் பறக்கும் படை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை நடத்திய சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி வாகனத்தில் கொண்டுவரப்பட்ட 70 கிலோ வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. சேலம், செவ்வாய்ப்பேட்டையில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் சரவணன் தலைமையில் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அதிகாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக சென்னையிலிருந்து வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். சோதனையில் வாகனத்தில் 70 கிலோ வெள்ளிக் கொலுசுகள் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், சேலம் கோட்டாட்சியா் அம்பாயிரநாதனிடம் ஒப்படைத்தனா். வாகன ஓட்டுநரான சென்னை, கிண்டியைச் சோ்ந்த சுனில் கஞ்சுவிடம் (30) அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதுகுறித்து வெள்ளிக் கொலுசுகள் சங்க நிா்வாகிகள் கூறுகையில், ‘உரிய ஆவணங்கள் இருந்தும் வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன; இதுகுறித்து தோ்தல் அதிகாரிகளிடம் புகாா் அளிக்கவுள்ளோம்’ என்றனா். எஸ்எல்26டிவெள்ளி... சேலம், செவ்வாய்ப்பேட்டையில் 70 கிலோ வெள்ளிக் கொலுசுகளை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்த தோ்தல் பறக்கும் படையினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com