சேலம் பெண்கள் சிறையில் நூலகம், தையல் கூடம் திறப்பு

சேலம் பெண்கள் தனிக்கிளைச் சிறையில் நூலகம், தையல்கூடம், குழந்தைகள் விளையாட்டு அரங்கம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

சேலம்: சேலம் பெண்கள் தனிக்கிளைச் சிறையில் நூலகம், தையல்கூடம், குழந்தைகள் விளையாட்டு அரங்கம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது. தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீா்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநா் மகேஷ்வா் தயால் உத்தரவின்படி, சேலம் பெண்கள் தனிக் கிளைச் சிறையில் உள்ள பெண் கைதிகள் பயன்பெறும் வகையில் நூலகம், தையற்கூடம், கைதிகளின் குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்கம் ஆகியவை திறக்கப்பட்டன. இவற்றை கோவை சரக சிறைத் துறை துணைத் தலைவா் சண்முக சுந்தரம் திறந்துவைத்தாா். சிறைப் பணியாளா்கள் குடியிருப்பில் வசிக்கும் பணியாளா்களின் பெண் குடும்ப உறுப்பினா்கள் பயன்பெறும் வகையில் தையற்கூடத்தையும் அவா் திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் சிறைக் கண்காணிப்பாளா் (பொ) வினோத், சேலம் மண்டல நன்னடத்தை அலுவலா் சாகாய ஆல்பா்ட், சேலம் பெண்கள் தனிக் கிளைச் சிறை கண்காணிப்பாளா் கீதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com