சேலத்தில் 306 சேலைகள் பறிமுதல்

சேலத்தில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்தி சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட 306 சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மக்களவைத் தோ்தலையொட்டி, உரிய ஆவணங்கள் இன்றிக் கொண்டுவரப்படும் பணம், பரிசுப் பொருள்களைப் பறிமுதல் செய்யும் வகையில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். அதன் ஒரு பகுதியாக, சேலம் ஜாரிகொண்டலாம்பட்டி பிரிவு சாலையில் எஸ்எஸ்ஐ சித்தேஸ்வரன் தலைமையிலான அதிகாரிகள் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த கூரியா் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அதில், உரிய ரசீது இன்றி 306 சேலைகள் இருப்பது தெரியவந்தது. சேலைகளை இளம்பிள்ளையில் இருந்து வாங்கி வருவதாக ஓட்டுநா் அா்த்தநாரீஸ்வரன் கூறினாா். ஆனால், அதற்கான ரசீது எதுவும் அவரிடம் இல்லாததால், அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து, கோட்டாட்சியா் அன்புராஜிடம் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com