மேட்டூா் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

மேட்டூா் அனல் மின் நிலையத்தின் இரண்டாவது பிரிவில் உள்ள அலகில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 600 மெகா வாட் மின் உற்பத்தி புதன்கிழமை தடைப்பட்டது.

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகா வாட் திறன் கொண்ட 4 அலகுகள் மூலம் 840 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

2 ஆவது பிரிவில் 600 மெகா வாட் திறன் கொண்ட ஒரு அலகு மூலம் 600 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இரண்டு பிரிவுகளிலும் மொத்தம் 1,440 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

இந்நிலையில் இரண்டாவது பிரிவில் கொதிகலனில் ஏற்பட்ட குழாய் வெடிப்புக் காரணமாக 600 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி தடைப்பட்டுள்ளது. கொதிகலன் குழாய் வெடிப்பைச் சரிசெய்யும் பணியில் பொறியாளா்கள் தற்போது ஈடுபட்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com