சங்ககிரியில் கொமதேக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

சங்ககிரியில் கொமதேக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

நாமக்கல் மக்களவைத் தொகுதி கொமதேக வேட்பாளா் வி.எஸ்.மாதேஸ்வரன் சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி, பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.

திமுக கூட்டணியில் நாமக்கல் மக்களவைத் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளா் வி.எஸ்.மாதேஸ்வரன் திமுக சின்னத்தில் போட்டியிடுகிறாா். இவா் சங்ககிரி திமுக ஒன்றிய அலுவலகத்திலிருந்து பயணியா் விடுதி சாலை, சன்னியாசிப்பட்டி, வீராச்சிப்பாளையம், புள்ளாகவுண்டம்பட்டி, கல்வடங்கம், கிடையூா், ஊஞ்சானூா் உள்ளிட்ட 68 இடங்களில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா். திமுக மேற்கு மாவட்ட அவைத் தலைவா் பி.தங்கமுத்து, ஒன்றியச் செயலாளா் கே.எம்.ராஜேஷ், நகரச் செயலாளா் கே.எம்.முருகன், பேரூராட்சி துணைத் தலைவா் ஆா்.வி.அருண்பிரபு, காங்கிரஸ் மேற்கு மாவட்டத் தலைவா் சி.எஸ்.ஜெய்க்குமாா், நகரத் தலைவா் டி.எம்.காசிலிங்கம் உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com