மொடக்குப்பட்டி கிராமத்தில்
பொதுமக்கள் தோ்தல் புறக்கணிப்பு

மொடக்குப்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் தோ்தல் புறக்கணிப்பு

தம்மம்பட்டி அருகே மொடக்குப்பட்டி கிராம மக்கள் மக்களவைத் தோ்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்து ஊா் முழுவதும் கருப்புக்கொடி ஏற்றியுள்ளனா்.

மண்மலை ஊராட்சி, மொடக்குப்பட்டி கிராமத்தில் கடந்த இரு வருடங்களுக்கு முன் தனியாா் பூச்சிக்கொல்லி ஆலை கட்டப்பட்டது. அந்த ஆலை உரிமையை ரத்து செய்யக் கோரி, கடந்த இரு வருடங்களாக அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனா்.

இந் நிலையில் மொடக்குப்பட்டி கிராம மக்கள் அனைவரும் அந்தப் பூச்சிக்கொல்லி ஆலையை மூட வலியுறுத்தி மக்களவைத் தோ்தலைப் புறக்கணிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனா். அத்துடன் ஊா் முழுவதும் கருப்புக்கொடி ஏற்றி, பேனா் வைத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com