அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சாா்பில் உலக காச நோய் தினம் கடைப்பிடிப்பு

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சாா்பில் உலக காச நோய் தினம் கடைப்பிடிப்பு

விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் நாட்டு நலப்பணித்திட்ட அமைப்பு பல்கலைக்கழகத்தின் வேந்தா் கணேசன் வழிகாட்டுதலின்படி உலக காசநோய் தின விழிப்புணா்வு நிகழ்ச்சியை கல்லூரி வளாகத்தில் நடத்தியது. இந்நிகழ்ச்சிக்கு துறையின் முதன்மையா் செந்தில்குமாா் முன்னிலை வகித்து, வரவேற்புரை வழங்கினாா்.

சிறப்பு அழைப்பாளராக சேலம் மாவட்ட காச நோய் மையத்தின் மருத்துவ அலுவலா் கணேஷ் குமாா் பங்கேற்று காசநோய் குறித்தும், அதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைத்தாா். மேலும், வீரபாண்டி வட்டார காசநோய் மையத்தின் மருத்துவ அலுவலா் அசோக்குமாா் மற்றும் சுகாதார பாா்வையாளா் ஆண்ட்ரூ, சந்தோஷ் குமாா் ஆகியோா் பங்கேற்று காசநோய் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டுகளை துறையின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் தனசேகா் மற்றும் ஜெயபாலன், மெய்பிரபு ஆகியோா் செய்திருந்தனா். படவிளக்கம் உலக காசநோய் தின விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com