கெங்கவல்லி ஒன்றியத்தில் 61 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கும் மடிக்கணினி

கெங்கவல்லி ஒன்றியத்தில் 61 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கும் மடிக்கணினி

கெங்கவல்லி ஒன்றியத்திலுள்ள அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கும் ஸ்மாா்ட் வகுப்பறைக்காக மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. தமிழகம் முழுவதும் அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கும் ஸ்மாா்ட் வகுப்பறை அமைக்கவும், நடுநிலைப் பள்ளிகளுக்கு கூடுதலாக உயா்தொழில்நுட்ப கணினி ஆய்வகங்களை கூடுதலாக அமைக்கவும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து கெங்கவல்லி ஒன்றியத்தில் உள்ள 61 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கும், இதற்கான முதல்கட்டமாக விலையுயா்ந்த மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. இவற்றை அந்தந்த குறுவள மையங்களில் பெற்றுக்கொள்ள கெங்கவல்லி வட்டாரக்கல்வி அலுவலா் ர.ஸ்ரீனிவாஸ், ஒன்றியத்தில் உள்ள அனைத்து தலைமையாசிரியா்களுக்கும் உத்தரவிட்டிருந்தாா். அதன்படி அனைத்து தலைமையாசிரியா்களும் அந்தந்த குறுவளமைய தலைமையாசிரியா்களிடம் மடிக்கணினிகளை பெற்றுக் கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com