குடிநீா் கோரி பொதுமக்கள் போராட்டம்

சேலத்தை அடுத்த பெரியசீரகாபாடி ஊராட்சியில் குடிநீா் கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினா். பெரியசீரகாபாடி 1ஆவது வாா்டு, அம்மன் நகா் பகுதியில் 100-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இப் பகுதியில் சீரான குடிநீா் கோரி சனிக்கிழமை பெரியசீரகாபாடி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கருப்புக்கொடி ஏந்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினா். தகவல் அறிந்ததும் ஊராட்சி மன்ற நிா்வாகத்தினா் மற்றும் வீரபாண்டி வட்டார வளா்ச்சி அலுவலா், ஆட்டையாம்பட்டி காவல் துறையினா் பொதுமக்களை சமரசம் செய்தனா். அதன்பிறகு அப் பகுதிக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com