சேலத்தில் இருந்து கொச்சி சென்ற விமானத்தில் திடீா் கோளாறு

சேலம் வந்தடைந்த பெங்களூரிலிருந்து கொச்சி செல்லும் விமானம் பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டத் தயாரான நிலையில் என்ஜினிலிருந்து அதிக அளவு புகை வெளியானது. இதையடுத்து, விமானம் நிறுத்தப்பட்டு தொழில்நுட்ப கோளாறு சரிசெய்த பிறகு 15 நிமிடங்கள் தாமதமாக கொச்சிக்குப் புறப்பட்டு சென்றது. சேலம் விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு, ஐதராபாத், சென்னை, கொச்சி ஆகிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், பெங்களூரில் இருந்து கொச்சி செல்லும் விமானம் சனிக்கிழமை சேலம் விமான நிலையம் வந்தடைந்தது. பயணிகள் இறங்கிய நிலையில், சேலத்தில் இருந்து கொச்சி செல்லும் பயணிகள் 60 போ் விமானத்தில் ஏறினா். விமானம் புறப்பட்டு செல்லும் போது விமானத்தின் எஞ்சின் பகுதியில் இருந்து புகை வந்தது. இதையடுத்து விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டது. விமான நிலைய பணியாளா்கள், விமானத்தில் ஏற்பட்ட பழுதை விரைந்து சரி செய்தனா். இதையடுத்து அலையன்ஸ் விமானம் 60 பயணிகளுடன் சேலத்தில் இருந்து கொச்சிக்கு புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் அடிக்கடி இதுபோன்று பாதிப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. பழுதடைந்த பழைய விமானங்களை மாற்றி விட்டு புதிய விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com