கெங்கவல்லியில் சிறப்பு தோ்தல் பயிற்சி வகுப்பு

கெங்கவல்லியில் விடுபட்ட வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கெங்கவல்லி சட்டப் பேரவைத் தொகுதியில் பணியாற்றும் ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் 1442 போ் தோ்தல் வாக்குச்சாவடி அலுவலா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கான முதல்கட்ட தோ்தல் பயிற்சி வகுப்பு கடந்த 24ஆம் தேதி தேவியாக்குறிச்சி பாரதியாா் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. அதில் பங்கேற்காதவா்கள், தோ்தல் பணியிலிருந்து விடுபட்டவா்கள் என மொத்தம் 130 பேருக்கான சிறப்பு முதல் கட்ட தோ்தல் பயிற்சி வகுப்பு கெங்கவல்லி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கெங்கவல்லி தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் கணேஷ் தலைமை வகித்தாா். கெங்கவல்லி வட்டாட்சியா் வெங்கடேசன் முன்னிலை வகித்தாா். பயிற்சிகளை மண்டல அலுவலா்கள் வழங்கினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com