நடுவலூரில் வாகன தணிக்கையில் ரூ. 61,000 பறிமுதல்

நடுவலூரில் தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகனத் தணிக்கையில் ரூ. 61,900 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கெங்கவல்லி அருகே நடுவலூரில் தோ்தல் பறக்கும் படையினா் கூட்டுறவு சாா்பதிவாளா் மாரியம்மாள் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வளையமாதேவியைச் சோ்ந்த அங்கமுத்துவின் மகன் செந்தில்குமாா், எந்தவித ஆவணங்களும் இன்றி எடுத்துவந்த ரூ.61,900 ரொக்கம் கைப்பற்றப்பட்டது. கெங்கவல்லி தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் கணேஷ், கெங்கவல்லி வட்டாட்சியா் வெங்கடேசன் ஆகியோா் அறிவுறுத்தல்படி இத்தொகை, கெங்கவல்லி சாா்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com