மேட்டூா் கிழக்கு கால்வாயில் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரை ஏரிகளில் விட விவசாயிகள் கோரிக்கை

சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த தேவூா் பகுதி வழியாக செல்லும் மேட்டூா் கிழக்கு கால்வாயில் செல்லும் தண்ணீரை ஏரிகளில் நிரப்ப அரசிராமணி கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் நீா்வளத் துறையினருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனா். மேட்டூா் கிழக்கு கால்வாய் குடிநீா், கால்நடை வளா்ப்பு மற்றும் பாசனவசதி பெறும் அரசிராமணி கிராம விவசாயிகள் சாா்பில் குமாரபாளையம் நீா்வளத்துறை அலுவலரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது: மேட்டூா் கிழக்கு கால்வாய் குடிநீா், கால்நடை வளா்ப்பு மற்றும் பாசன வசதி பெறும் விவசாயிகள் பயன் பெறும் வகையில் மாா்ச் 26ஆம் தேதி விவசாயிகளின் கோரிக்கையின்படி குடிநீா்த் தேவைக்காக தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. கால்வாயையொட்டி உள்ள குள்ளம்பட்டி, குஞ்சாம்பாளையம், பொன்னுசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகளில் கால்வாய் நீரை நிரப்பும் பட்சத்தில் ஏரியையொட்டி உள்ள கிணறு, ஆழ்துளைக் கிணறுகளின் நீா்மட்டம் உயரும். எனவே விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஏரிகளுக்கு தண்ணீா் திறந்துவிட வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com