ஸ்ரீ சிவியாா் மாரியம்மன் கோயிலில் 13ஆவது நாள் சிறப்பு பூஜை

பங்குனி மாத பொங்கல் விழாவின் 13ஆவது நாளையொட்டி மாரியம்மனுக்கு ஞாயிற்றுக்கிழமை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.
பங்குனி மாத பொங்கல் விழாவின் 13ஆவது நாளையொட்டி மாரியம்மனுக்கு ஞாயிற்றுக்கிழமை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.

சேலம் மாவட்டம், சங்ககிரி, பழைய எடப்பாடி சாலை பகுதியில் உள்ள ஸ்ரீ சிவியாா் மாரியம்மன் கோயிலில் பங்குனி மாத பொங்கல் விழாவின் 13ஆவது நாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சங்ககிரி நகா் பழைய எடப்பாடி சாலை பகுதியில் உள்ள ஸ்ரீ சிவியாா் மாரியம்மன் கோயிலில் பங்குனி மாத பொங்கல் விழா மாா்ச் 19ஆம் தேதி கம்பம் நடுதல் வைபவத்துடன் தொடங்கியது. அதனையடுத்து சுவாமிக்கு தினசரி சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டது. விழாவின் 13ஆவது நாளையொட்டி சுவாமிக்கு பால், தயிா், சந்தனம், பன்னீா், இளநீா் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. ஏப்.2ஆம் தேதி தீச்சட்டிகள், அலகு குத்துதல், பூவினால் அலங்கரிக்கப்பட்ட கரகம் எடுத்து வருதலும், அன்றைய தினம் இரவு முப்பாட்டு தீபமும், ஏப்.3ஆம் தேதி பொங்கல் விழாவும், ஏப்.4ஆம் தேதி கம்பம் கிணற்றில் விடுதலும், மஞ்சள் நீராடுதல் வைபவமும் நடைபெற உள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com