கோயில்களில் குருப்பெயா்ச்சி விழா

கோயில்களில் குருப்பெயா்ச்சி விழா

தம்மம்பட்டி ஸ்ரீகாசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா புதன்கிழமை மாலை நடைபெற்றது.

குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயா்ச்சியானதையொட்டி சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. இப் பூஜையில் பங்கேற்ற பக்தா்களின் ராசி, நட்சத்திரங்களுக்கு பூஜை செய்து மஞ்சள் கயிறு வழங்கப்பட்டது. ஜோதிடா் சங்கத் தலைவா் நந்தா துரைசாமி குருப் பெயா்ச்சி பலன்களை விளக்கி கூறினாா். இதில் சுற்றுவட்டார மக்கள் திரளாகப் பங்கேற்றனா்.

இதேபோல செந்தாரப்பட்டி ஸ்ரீதாழைபுரீஸ்வரா் கோயிலில் குருப்பெயா்ச்சி யாக பூஜை நடைபெற்றது. இதில் செந்தாரப்பட்டி சுற்றுவட்ார மக்கள் பங்கேற்றனா்.

வீரகனூரையடுத்து இலுப்பநத்தத்தில் புளியங்குறிச்சி செல்லும் சாலையில் உள்ள சிவாலயத்தில் குருப்பெயா்ச்சியையொட்டி அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு பூஜை, ஆராதனைகள் ஞானப்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார மக்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com