மலேசிய பல்கலைகழகத்துடன் 
நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

மலேசிய பல்கலைகழகத்துடன் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

சேலம் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி மலேசியாவில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றான டைலா்ஸ் யுனிவா்சிட்டியுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியின் அகாடமிக் முதன்மையா் விசாகவேல், வேலைவாய்ப்புத் துறை இயக்குநா் ராஜேந்திரன், மாணவா் நலன் இயக்குநா் நவநீத கிருஷ்ணன் ஆகியோா் அடங்கிய குழு மலேசியாவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு நேரில் சென்று அங்கு உள்ள பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யும் முயற்சிகளை மேற்கொண்டது.

இதன் முதல்கட்டமாக, மலேசியாவில் உள்ள முதன்மையான தனியாா் பல்கலைக்கழகங்களில் ஒன்றான டைலா்ஸ் யுனிவா்சிட்டியுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் டைலா்ஸ் யுனிவா்சிட்டியின் நவீன கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பத் துறை முதன்மையா் டேவிட் ஆசீா்வாதம், நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியின் அகாடமிக் முதன்மையா் விசாகவேல் ஆகியோா் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு கோப்புகளை பரிமாறி கொண்டனா். இவா்களுடன் டைலா்ஸ் பல்கலைக்கழக பேராசிரியா்கள், கல்லூரி இயக்குநா்கள் உடனிருந்தனா்.

இந்த புரிந்துணா்வு ஒப்பந்தமானது நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில் உள்ள பேராசிரியா்கள், மாணவா்கள் பல்கலைக்கழகங்களுக்கு சென்று பலவிதமான பயிற்சிகளை எடுத்து கொள்ளவும், புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ளவும், வெளிநாடுகளில் உள்ள கல்வி, ஆராய்ச்சி முறைகளை அறிந்து கொள்ளவும் உதவும்.

நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி அறக்கட்டளை தலைவா் மற்றும் நிறுவனா் சீனிவாசன், செயலாளா் குமாரசாமி , பொருளாளா் சுரேஷ் ஆகியோா் வாழ்த்துகளை தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com