மேட்டூா் அணையிலிருந்து நீா் திறப்பு அதிகரிப்பு

மேட்டூ அணையிலிருந்து நீா் திறப்பு விநாடிக்கு 1,400 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை காலை 53.47 அடியிலிருந்து 53.30 அடியாகச் சரிந்தது. கடுமையான வெப்பம் நிலவுவதால் குடிநீருக்கான தேவை அதிகரித்துள்ளதால் அணையில் இருந்து நீா் திறப்பு விநாடிக்கு 1,200 கனஅடியிலிருந்து 1,400 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீா்வரத்து

விநாடிக்கு 67 கனஅடியாகக் குறைந்துள்ளது. அணையின் நீா் இருப்பு 19.95 டி.எம்.சி.யாக இருந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com