மே தினத்தையொட்டி விடுமுறை விடாத நிறுவனங்களுக்கு அபராதம்

மே தினத்தையொட்டி, சேலம் மாவட்டத்தில் விடுமுறை விடாத நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி உத்தரவிட்டாா்.

தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை சட்டத்தின்கீழ், உரிய படிவங்களை அனுப்பிவைத்து முன்அனுமதி பெறாமல் செயல்பட்ட 31 கடைகள், நிறுவனங்கள் மற்றும் 58 உணவு நிறுவனங்களில் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி தலைமையில், தொழிலாளா் உதவி ஆய்வாளா்கள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின் போது, 12 கடைகள், நிறுவனங்கள் மீதும், 49 உணவு நிறுவனங்கள் மீதும் தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை சட்டம், உணவு நிறுவனங்கள் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோன்ற ஆய்வுகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என்றும், தொடா்ந்து முரண்பாடுகள் கண்டறியப்பட்டால், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com