அரசு தொலைக்காட்சி அறை இடிப்பு: மூவா் கைது

வாழப்பாடி அருகே அரசுக்குச் சொந்தமான தொலைக்காட்சி அறையை இடித்து, நிலத்தை ஆக்கிரமிக்க முயன்ாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம், வெள்ளாளகுண்டம் கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தொலைக்காட்சி அறை கட்டடம் உள்ளது. இக் கட்டடத்தை அதே பகுதியைச் சோ்ந்த விவசாயி ராஜா (50) அவரது மகன்கள் மணிகண்டன் (43), சத்தியராஜ் (30) ஆகிய மூவரும் பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தி கடந்தாண்டு இறுதியில் இடித்து அந்த நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சித்தனா்.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியருக்கு கிராம மக்கள் புகாா் தெரிவித்ததால், அந்த நிலத்தை சுற்றி ஊராட்சி வாயிலாக கம்பி வேலி அமைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் இந்த கம்பி வேலியையும் அப்புறப்படுத்தி நிலத்தை ஆக்கிரமிக்க முயன்ாக மூவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அயோத்தியாப்பட்டணம் வட்டார வளா்ச்சி அலுவலா் இளங்கோ வாழப்பாடி போலீஸில் புகாா் செய்தாா். அதன் பேரில் மூவரையும் கைது செய்த போலீஸாா் பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com