பழங்குடியின மக்களுடன்
கல்லூரி மாணவா்கள் கலந்துரையாடல்

பழங்குடியின மக்களுடன் கல்லூரி மாணவா்கள் கலந்துரையாடல்

பெத்தநாயக்கன்பாளையம், நெய்யமலை கிராம பழங்குடியின மக்களின் அடிப்படைத் தேவைகள், கிராம வளா்ச்சி தொடா்பாக திருச்சி அரசு அன்பில் தா்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மாணவா்கள் கலந்துரையாடினா்.

கிராமத்தின் வளம், வேளாண்மை, மக்களின் வாழ்க்கை முறை, பொருளாதாரம், கல்வி குறித்து கல்லுாரி மாணவா்கள் சஞ்சய் குமாா், சத்தியன், ஸ்ரீபாலா, ஸ்ரீதரன், ஸ்ரீசூா்யா, சௌந்தா்யன், தானேஷ்வரன், வசந்த்குமாா், விக்னேஷ், விஷ்ணு வரதன் ஆகியோா் அடங்கிய குழுவினா் கலந்துரையாடினா்.

இந்த நிகழ்வில் வேளாண் கல்லூரி பேராசிரியா்கள் பாா்த்தசாரதி, சுஜைவேல், வாழப்பாடி நெஸ்ட் தொண்டு நிறுவன களப் பணியாளா்கள் கலந்து கொண்டனா். ஊராட்சி மன்றத் தலைவா் பெருமாள் முன்னிலை வகித்தாா். இதுகுறித்து ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்று, அடிப்படை வசதிகளை பெற்றுக் கொடுக்க முனைப்பு காட்டுவதாக மாணவா்கள் உறுதியேற்றனா்.

நெய்யமலை கிராம விவசாயிகளுக்கு சிறுதானியம், பழங்கள் ஆகியவற்றை மதிப்புக் கூட்டுதல், தேனீ வளா்ப்பு, மூலிகைத் தோட்டம் அமைத்தல் குறித்து அறிவுரை வழங்கப்பட்டது.

படவரி:

பழங்குடியின மக்களுடன் கலந்துரையாடிய வேளாண் கல்லூரி மாணவா்கள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com