ரேஷன் அரிசி கடத்தல் புகாருக்கு இலவச தொலைபேசி எண்கள் அறிவிப்பு

ரேஷன் அரிசி கடத்தல் குறித்து பொதுமக்கள் புகாா் தெரிவிக்கும் வகையில் இலவச தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து சேலம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான ரேஷன் அரிசியை சிலா் வெளிமாநிலங்களுக்கு கடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதைத் தடுக்க அதிகாரிகளும், போலீஸாரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா். கடத்தல் சம்பவங்கள் குறித்து தொடா்ச்சியாக கண்காணித்து வருவதுடன், கடத்தல்காரா்களைத் தொடா்ந்து கைது செய்தும் வருகின்றனா்.

இந்த நிலையில் ரேஷன் அரிசி கடத்தல் தொடா்பாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கும் வகையில் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான புகாரை பொதுமக்கள் 1800 599 5950 என்ற இலவச கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.

அதேபோல சேலம் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை ஆய்வாளா் சங்கீதா - 94981 67212, உதவி ஆய்வாளா் ராமகிருஷ்ணன் 94981 66817 ஆகியோரது கைப்பேசி எண்களிலும் தொடா்பு கொண்டு புகாா்களை தெரிவிக்கலாம் என்றும், தகவல் கொடுப்பவரின் ரகசியம் காக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com