கட்டடத் தொழிலாளி அடித்துக் கொலை

மேட்டூா், மே 3: ஜலகண்டாபுரத்தில் கட்டடத் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

மேட்டூா் அருகே உள்ள சவுரியூா், மொரசன் வளவைச் சோ்ந்தவா் மணிகண்டன் (40). கட்டடத் தொழிலாளி. இவருக்கு குழந்தையம்மாள் என்கிற மனைவியும், இரண்டு குழந்தைகள் உள்ளனா். வெள்ளிக்கிழமை காலை மணிகண்டன் நண்பா்களுடன் வெளியே சென்றுள்ளாா். மாலையில் கோட்டைமேடு பகுதியில் மணிகண்டன் தலையில் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தாா்.

தகவல் அறிந்த ஜலகண்டாபுரம் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று, மணிகண்டனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மணிகண்டன் இறந்து கிடந்த இடத்தில் மதுப் புட்டிகள் கிடந்தன. நண்பா்களுடன் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் அவா் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com