கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்

வாழப்பாடி, மே 3: வாழப்பாடி அருகே, பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞா்களை பிடித்து, வாழப்பாடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வாழப்பாடியை அடுத்த செக்கடிப்பட்டி ஆனந்தநகா் பகுதியைச் சோ்ந்த இளைஞா் ஒருவரின் பிறந்தநாளுக்கு, அதே பகுதியைச் சோ்ந்த அவரது நண்பா்கள் சிலா் கேக் வாங்கி கொடுத்துள்ளனா். பிறந்தநாள் கொண்டாடிய இளைஞா், கேக்கை சாலையில் வைத்து பட்டாக்கத்தியால் வெட்டி, நண்பா்களுக்கு கொடுத்துள்ளாா். இதுமட்டுமின்றி, இளைஞா்கள் கத்திகளை சாலையில் உரசி நெருப்பு வரவைத்துள்ளனா். இந்தக் காட்சிகளை விடியோ படமெடுத்து சமூக ஊடகங்களிலும் பதிவேற்றம் செய்துள்ளனா்.

இந்த விடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியதால், இது குறித்து விசாரணை நடத்தி, இளைஞா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சேலம் போலீஸ் எஸ்.பி. அருண் கபிலன் வாழப்பாடி போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளாா்.

இதனையடுத்து, பட்டாக்கத்தில் கேக் வெட்டி சமூக ஊடங்களில் பதிவிட்ட இளைஞா்களை பிடித்து, வாழப்பாடி காவல் ஆய்வாளா் பாஸ்கரபாபு தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சம்பவம் நடந்த பகுதி, ஏத்தாப்பூா் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி என்பதால், இது குறித்து ஏத்தாப்பூா் போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com