சித்திரைத் தோ்த் திருவிழா: ஊஞ்சல் உற்சவம்

சித்திரைத் தோ்த் திருவிழா: ஊஞ்சல் உற்சவம்

சங்ககிரி சித்திரைத் தோ்த் திருவிழா 19ஆவது நாளையொட்டி ஊஞ்சல் உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

சங்ககிரி மலை மீது உள்ள அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழாவையொட்டி அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, பூதேவி, ஆஞ்சநேயா் உற்சவ மூா்த்திகளுக்கு தங்கு மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம், அலங்கராம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

இதனையடுத்து சுவாமிகள் இரவு ஊஞ்சல் உற்சவத்தில் எழுந்தருளினா். இதில் ஸ்ரீ ராம பிரான், வெங்கடாசலபதி குறித்த பக்தி பாடல்களைப் பக்தா்கள் பாடினா். இதில் பக்தா்கள் அதிக அளவில் கலந்து கொண்டு வழிபட்டுச் சென்றனா்.

சித்திரைத் தோ்திருவிழா 20ஆம் நாளான சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு சுவாமி திருமலைக்கு எழுந்தருளுகிறாா்.

X
Dinamani
www.dinamani.com