திருநாவுக்கரசா் குருபூஜை

தம்மம்பட்டி, மே 3: தம்மம்பட்டி சிவன் கோயிலில் திருநாவுக்கரசா் குருபூஜை நடைபெற்றது.

தம்மம்பட்டி ஸ்ரீகாசி விசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதா் கோயிலில் திருநாவுக்கரசா் குருபூஜை விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் திருநாவுக்கரசா் பாடிய திருமுறையில் முக்கிய பாடல்கள் அனைத்தும் பாடப்பட்டன. தம்மம்பட்டி சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த சிவனடியாா்கள் 100க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com