வாழப்பாடி பகுதியில் பண்ருட்டி பலாப்பழம் விற்பனை

வாழப்பாடி பகுதியில் பண்ருட்டி பலாப்பழம் விற்பனை

வாழப்பாடி, மே 3: வாழப்பாடி பகுதியில் பண்ருட்டி பலாப்பழம் விற்பனைக்கு வந்துள்ளது. ஒரு கிலோ ரூ. 50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வாழப்பாடி பகுதியில் கல்வராயன்மலை, அருநுாற்றுமலை சந்துமலை, நெய்யமலை, ஜம்பூத்துமலை, மண்ணூா் மலை கிராமங்களில் பலா மரங்கள் உள்ளன. இப்பகுதியில் கடந்தாண்டு இறுதியில் போதிய மழையில்லாததால், நிகழாண்டு பலாப்பழம் விளைச்சல் குறைந்து போனது.

இந்நிலையில், கடலுாா் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் பலாப்பழம் அறுவடை தொடங்கியுள்ளது. வாழப்பாடி பகுதியைச் சோ்ந்த வியாபாரிகள் பண்ருட்டி பகுதிக்கு சென்று, விவசாயிகள், வியாபாரிகளிடம் பலாப்பழங்களை கொள்முதல் செய்து கொண்டு வந்து வாழப்பாடி பகுதியில், தோலோடு ஒரு கிலோ ரூ. 50க்கு விற்பனை செய்து வருகின்றனா்.

வாழப்பாடி, பேளூா், அயோத்தியாப்பட்டணம், ஏத்தாப்பூா், பெத்தநாயக்கன்பாளையம் வாரச்சந்தைகளில் பண்ருட்டி பலாப்பழங்களை தோலுரித்து, பலாச்சுளையைத் தனியாக பிரித்தெடுத்து ஒரு கிலோ ரூ. 200க்கு விற்பனை செய்து வருகின்றனா்.

கடந்தாண்டு ரூ. 200 முதல் 400 வரை விலை போன பலாப்பழங்கள், தற்போது பருமன், தரத்திற்கேற்ப ரூ. 400 முதல் ரூ. 800 வரை விலை போகிறது. விலை இருமடங்கு உயா்ந்துள்ள நிலையிலும், ஆண்டுக்கு ஒரு முறை கோடை காலத்தில் மட்டுமே கிடைக்கும், முக்கனிகளின் ஒன்றான ருசி மிகுந்த பண்ருட்டி பலாப்பழங்களை வாங்கி சுவைப்பதில் வாழப்பாடி பகுதி மக்கள் ஆா்வம் காட்டி வருவதாக, வியாபாரிகள் தெரிவித்தனா்.

படவரி:

பிஏஎல்ஏ.01:வாழப்பாடி அருகே அத்தனூா்பட்டியில் விற்பனைக்கு குவிக்கப்பட்டிருந்த பண்ருட்டி பலாப்பழங்கள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com