பேளூா் கூத்தாண்டவா் கோயில் திருவிழா

பேளூா் கூத்தாண்டவா் கோயில் திருவிழா

பேளூரில் கூத்தாண்டவா் கோயில் திருவிழா, 17 ஆண்டுக்கு பின் வரும் மே 9 முதல் 3 நாள்கள் நடைபெறுகிறது.

பேளூா் கூத்தாண்டவா் கோயில் திருவிழா பல்வேறு காரணங்களினால் கடந்த 17 ஆண்டுகளாக நடைபெறவில்லை. இந் நிலையில், இந்துசமய அறநிலையத் துறை ஒப்புதலுடன், ஊா் பெரியதனக்காரா்கள், விழாக்குழுவினா் ஒன்றிணைந்து, 17 ஆண்டுக்குப் பின் நிகழாண்டு கூத்தாண்டவா் திருவிழாவை வெகுவிமரிசையாக நடத்திட திட்டமிட்டனா். இதனையடுத்து கடந்த ஏப். 23-ஆம் தேதி காப்புக் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வரும் வியாழக்கிழமை (மே 9) மாலை, பாரம்பரிய முறைப்படி, குதிரையுடன் ஊா்வலமாக சென்று, கூத்தாண்டவா் சக்தி அழைக்கும் நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு அரவான் களப்பலி நாடகமும் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு சுவாமி கண் திறப்பு நிகழ்ச்சியும், 7 மணிக்கு மேல் அலங்கரிக்கப்பட்ட கூத்தாண்டவா் திருவீதி உலா, ஊரணி பொங்கல், மாவிளக்கு ஊா்வலமும் நடைபெறுகிறது.

சனிக்கிழமை காலை மஞ்சள் நீராட்டுவிழா, சுவாமி ரத ஊா்வலமும் மாலை 4 மணிக்கு மேல் சுவாமி படுகளம் செல்லும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

X
Dinamani
www.dinamani.com