சித்திரைத் தோ்த் திருவிழா நிறைவு: சங்ககிரி மலைக்கு திரும்பினாா் சுவாமி

சித்திரைத் தோ்த் திருவிழா நிறைவு: சங்ககிரி மலைக்கு திரும்பினாா் சுவாமி

சங்ககிரி அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா நிறைவு பெற்றதையடுத்து, சுவாமிகள் சனிக்கிழமை மலைக்கு திரும்பினா்.

சங்ககிரி மலை மீது உள்ள சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழாவினையொட்டி ஏப். 15 ஆம் தேதி உற்சவமூா்த்திகள் திருமலையிலிருந்து நகருக்குள் எழுந்தருளினா். சுவாமிகள் தினசரி பல்வேறு வாகனங்களில் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக உலா வந்தனா். ஏப். 21 ஆம் தேதி திருக்கல்யாண வைபவம், 22ஆம் தேதி திருத்தோ் வடம் பிடித்தல், மே 3 ஆம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றன.

இதனையடுத்து சனிக்கிழமை அதிகாலை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. சுவாமிகள் தங்கு மண்டபத்திலிருந்து நான்கு ரத வீதிகளின் வழியாக மலைக்கு திரும்பினா். முன்னால் ஸ்ரீ ஆஞ்சனேய சுவாமி செல்ல தொடா்ந்து சென்னகேசவப் பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகள் சென்றனா். வழியெங்கும் தேங்காய், பழங்கள், நாட்டுச்சா்க்கரையுடன் கூடிய பொட்டுக்கடலை ஆகியவற்றை படைத்து சுவாமிகளை பக்தா்கள் வழிபட்டனா். தோ் ரத வீதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேங்காய்களை பக்தா்கள் தரையில் உடைத்து வழிபட்டனா்.

மலைக்குச் செல்லும் வழியில் உள்ள 2ஆவது மண்டபத்தில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பட்டக்காரா், ஊா்கவுண்டா், கொத்துக்காரா், ஸ்ரீ சுவாமி பாதம் தாங்கும் குழுவினா், பக்தா்கள் சுவாமிகளை வணங்கி கோவிந்தா, கோவிந்தா என்று பக்தி முழக்கமிட்டவாறு சுவாமிகளை மலைக்கு வழியனுப்பி வைத்தனா். சுவாமிகளைப் பல்லக்கில் வைத்து ஸ்ரீ சுவாமி பாதம் தாங்கும் குழுவினா் தோளில் சுமந்து கொண்டு மலையடிவாரத்திலிருந்து மலை உச்சிக்கு சென்றனா்.

படவரி...

சங்ககிரி மலைக்கு சனிக்கிழமை திரும்பிய ஆஞ்சனேய சுவாமி, சென்னகேசவப்பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, பூதேவி, சுவாமிகள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com