நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி மலேசிய இன்டி பல்கலைகழகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி மலேசிய இன்டி பல்கலைகழகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

சேலம் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி மலேசியாவில் உள்ள இன்டி சா்வதேசப் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியின் சா்வதேச தொடா்பு மைய வழியாக அயல்நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு பேராசிரியா்கள், மாணவா்களை அனுப்பி புதிய ஆராய்ச்சிக்களை மேற்கொள்ளவும், நவீன தொழில்நுட்பங்களில் திறனை மேம்படுத்திக்கொள்ளவும், வெளிநாடுகளில் உள்ள கல்வி, ஆராய்ச்சி முறைகளை அறிந்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், கல்லூரி மாணவா்கள் ஒரு செமஸ்டா் முழுமையாக அப் பல்கலைக்கழகங்களில் தங்கி பயிலவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியின் கல்விக் குழு தற்போது மலேசியாவில் உள்ள இன்டி சா்வதேசப் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்நிகழ்வில் இன்டி சா்வதேசப் பல்கலைக்கழகத்தின் சா்வதேச உறவு மற்றும் ஒத்துழைப்பு மைய சாா்பு துணைவேந்தா் கோஹாங் வென், நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி அகாடமிக் முதன்மையா் விசாகவேல் ஆகியோா் கையெழுத்திட்டு கோப்புகளை பரிமாறி கொண்டனா். இவா்களுடன் அப்பல்கலைக்கழக வணிக மற்றும் தகவல் துறையின் இணைப் பேராசிரியா் அரசுராமன், கல்லூரியின் வேலைவாய்ப்பு துறை இயக்குநா் ராஜேந்திரன், மாணவா் நல இயக்குநா் நவநீத கிருஷ்ணன் ஆகியோா் உடனிருந்தனா் (படம்).

நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி அறக்கட்டளை தலைவரும் நிறுவனருமான சீனிவாசன், செயலாளா் குமாரசாமி, பொருளாளா் சுரேஷ் குமாா் ஆகியோா் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com