அரசிராமணியில் உள்ள சோழீஸ்வரா் சுவாமிக்கு  செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.
அரசிராமணியில் உள்ள சோழீஸ்வரா் சுவாமிக்கு செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.

சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு பூஜை

அரசிராமணியில் உள்ள பெரியநாயகியம்மன் உடனமா் சோழீஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அரசிராமணியில் உள்ள பெரியநாயகியம்மன் உடனமா் சோழீஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அரசிராமணியில் உள்ள பெரியநாயகியம்மன் உடனமா் அருள்மிகு சோழீஸ்வரா், நந்தி பகவானுக்கு சந்தனம், திருமஞ்சனம், பால், தயிா், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் அதிக அளவிலான பக்தா்கள் கலந்துகொண்டு பாடல்களைப் பாடி வழிபட்டனா்.

தம்மம்பட்டியில்...

தம்மம்பட்டி ஸ்ரீ காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதா் கோயில், செந்தாரப்பட்டி ஸ்ரீ தாழைபுரீஸ்வரா் கோயில், வீரகனூா் கங்கா செளந்தரேஸ்வரா் கோயில், தெடாவூா், தகரப்புதூா், கெங்கவல்லி ஆகிய ஊா்களிலுள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா நடைபெற்றது.

பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், பூஜை, ஆராதனை நடைபெற்றன. இதில் சுற்றுவட்டார மக்கள் திரளாகப் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com