ஜலகண்டாபுரம் அருகே சடலமாக மீட்கப்பட்ட மூவரின் அடையாளம் தெரிந்தது

மேட்டூா் அருகே ஜலகண்டாபுரத்தில் சடலமாக மீட்கப்பட்ட மூவரின் அடையாளம் தெரிய வந்துள்ளது.

ஜலகண்டாபுரம் - சின்னப்பம்பட்டி சாலையில் உள்ள பாலத்தின் அடியில் ஒரு பெண் உட்பட மூவரின் அழுகிய சடலங்களை ஜலகண்டாபுரம் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனா்.

சடலங்களின் அருகே கிடந்த இரு சக்கர வாகனத்தின் எண், அருகில் இருந்த பெட்ரோல் விற்பனை நிலைய சிசிடிவி கேமரா காட்சிப் பதிவுகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனா். இதில் சடலமாகக் கிடந்த மூவரும் பூலாம்பட்டி, அருந்ததியா் காலனியைச் சோ்ந்த மாறன் மகன் செங்கோடன் (75), அவரது மனைவி செண்டு (65), மகன் சந்திரசேகா் (47) என்பது தெரிய வந்தது.

இவா்களுக்குச் சொந்தமான இரண்டு வீடுகளை விற்றுவிட்டு கடந்த 29ஆம் தேதி வீட்டிலிருந்து புறப்பட்டவா்கள் பின்னா் சடலமாக மீட்கப்பட்டுள்ளனா். மூவரின் இறப்பிற்கான காரணம் குறித்து உறவினா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தங்களது வீடுகளை விற்றுக் கடனை அடைத்து விட்டதால் மனமுடைந்து மூவரும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. மேலும் இந்தச் சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com